கிராம நிர்வாக அதிகாரி அருள் நிக்கேல் சந்தியாகு, தலையாரி மாரியப்பன் ஆகியோர், லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டனர்
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, ஒப்பந்ததாரகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, ரூ.50,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ளது கீழப் பிள்ளையார் குளம். இந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரியாக அருள் நிக்கேல் சந்தியாகு மற்றும் தலையாரி மாரியப்பன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கீழ பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த லவக்குமார் என்பவர் (சொத்து மதிப்பு சான்றிதழ்) ஒப்பந்ததாரராகப் பதிவு செய்ய வேண்டும் எனக் கீழப் பிள்ளையார் குளம் கிராம நிர்வாக அதிகாரி அருள் நிக்கேல் சந்தியாகுவை அணுகியுள்ளார்.
அப்போது, சொத்து மதிப்பு சான்றிதழ் ஆவண ஒப்பந்ததாரராகப் பதிவு செய்ய வேண்டும் என்றால், ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளனர் கீழப் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி அருள் நிக்கேல் சந்தியாகு மற்றும் தலையாரி மாரியப்பன் ஆகியோர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லவக்குமார், இது குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரியை பொறி வைத்துப் பிடிக்க பிடிக்க திட்டமிட்டனர்.
அந்த வகையில், கீழப் பிள்ளையார் குளம் கிராம நிர்வாக அதிகாரி அருள் நிக்கேல் சந்தியாகு மற்றும் தலையாரி மாரியப்பன் ஆகியோர், லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.