கடலூர்: மதுபானம் வாங்கச் சென்றபோது பழுதான டூவீலர் - கோபத்தில் தீவைத்துக் கொளுத்திய கொடூரம்

கடலூர்: மதுபானம் வாங்கச் சென்றபோது பழுதான டூவீலர் - கோபத்தில் தீவைத்துக் கொளுத்திய கொடூரம்
கடலூர்: மதுபானம் வாங்கச் சென்றபோது பழுதான டூவீலர் - கோபத்தில் தீவைத்துக் கொளுத்திய கொடூரம்

இரு சக்கர வாகனம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து தீயில் கருகியது

கடலூர் அருகே மது வாங்கச் சென்றபோது பழுதானதால் ஆத்திரத்தில் தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்திய வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே சர்வ ராஜன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் 30 வயது மகன் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காட்டுமன்னார்கோயிலில் உள்ள மதுபான கடையில் மது வாங்க தனது மோட்டார் சைக்கிள் மூலம் சென்றுள்ளார். 
அப்போது வீரநந்தம் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம் பழுதாகி நின்றுவிட்டது. தனது இரு சக்கர வாகனத்தை பலமுறை அவர் இயக்க முயற்சி செய்தும், எந்தப்பலனும் இல்லாததால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திறந்து விட்டு நடுரோட்டில் நிறுத்தி தீயிட்டுக் கொளுத்தினார். வாகனம் கொழுந்து விட்டு எரிந்து முழுவதும் முற்றிலும் தீயில் எரிந்து கருகியது.
இந்தச் சம்பவத்தால் சில மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இது குறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com