சென்னை: மீன் கடைகளை அகற்றும் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: மீன் கடைகளை அகற்றும் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை: மீன் கடைகளை அகற்றும் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கருத்து

சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது

சென்னை மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனச் மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்யவும், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் இருக்கும் மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், போக்குவரத்தை முறைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன் கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குப்படுத்தப்படும் எனவும், கலங்கரைவிளக்கத்தின் பின்புறமும் சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாநகராட்சி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், யாருக்கும் தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை எனவும், பொதுசாலை மாநகராட்சி சொத்தல்ல எனவும், அது மக்கள் சொத்து எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com