சேலம்: அட்வான்ஸ் பெற்றதும் மாயமான கப்பல்- ஆன்லைனில் சுண்ணாம்புக்கல் மோசடி

சேலம்: அட்வான்ஸ் பெற்றதும் மாயமான கப்பல்- ஆன்லைனில் சுண்ணாம்புக்கல் மோசடி
சேலம்: அட்வான்ஸ் பெற்றதும் மாயமான கப்பல்- ஆன்லைனில் சுண்ணாம்புக்கல் மோசடி

ஆன்லைன் மோசாடிதான் இது. விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்'

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பூவிழி. பட்டதாரியான இவர் கணபதி டிரேடர்ஸ் என்கிற நிறுவனத்தை மேட்டூரில் நடத்தி வருகிறார். இதன் மூலம் சுண்ணாம்பு கல்லை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இங்குள்ள கடைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். 
சமீபத்தில் சுண்ணாம்புக் கல்லை இறக்குமதி செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருக்கிறார். அதன் மூலம் ஜனா என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுண்ணாம்பு கல்லை கொள்முதல் செய்து, காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் பூவிழி. மேலும் ஜனா மூலமாக முயற்சி செய்ய, அவர் நான்கு கப்பல் கம்பெனிகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அதில் ஒரு கம்பெனியை தேர்வு செய்து பூவிழி சொல்ல, ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. 
அட்வான்ஸ் 20 சதவீதமும், இறக்குமதி செய்யப்பட்டதும் மீதி 80 சதவீத பணத்தை கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து இ- மெயில் மூலமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அட்வான்ஸ் தொகை 8000  டாலர்கள், (இந்திய தொகை மதிப்பில் ரூ.42.5 லட்சம்) கம்பெனி அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு கப்பலைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை. பூவிழி போன் செய்து பார்த்ததி ஜனா தரப்பின் மொபைல் எண்ணும் உபயோகத்தில் இல்லை.
இதுபற்றி சந்தேகம் அடைந்த பூவிழி, சேலம் புறநகர் எஸ்.பி சிவக்குமாரிடம் புகார் கொடுக்க, சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் மாற்றபட்டிருக்கிறது.
இது பற்றி கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் கேட்டோம். 'ஆன்லைனில் பேசி அதன் வழியே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆன்லைன் மோசாடிதான் இது. விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com