பெண்களே உஷார்.... நம்பி ஏமாந்துடாதீங்க ; இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் இன்னலில் சிக்கிய பெண்கள்

பெண்களே உஷார்.... நம்பி ஏமாந்துடாதீங்க ; இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் இன்னலில் சிக்கிய பெண்கள்
பெண்களே உஷார்.... நம்பி ஏமாந்துடாதீங்க ; இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் இன்னலில் சிக்கிய பெண்கள்

பெண் உடற்பயிற்சியாளர் தானே என நம்பிய சில பெண்களும், தங்கள் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் ஆபத்துகள் பல உள்ளன  என்ன தெரிந்தும், உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு இன்ஸ்டாகிராமில் பெண்கள் சிலரால் பகிரப்பட்ட புகைப்படங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்ததுள்ளது. இன்ஸ்டாகிராமில் எதிர்தரப்பில் பேசுபவர் பெண் உடற்பயிற்சியாளர் தானே என நம்பிய சில பெண்கள் தங்கள் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். 

வீட்டில் இருந்த படியே உடல் எடையை குறைக்க வேண்டுமா? டயட் இல்லாமல், உடலை கடுக்கோப்பாக மாற்ற வேண்டுமா?  என்று வசீகர குரலில் கவர்ச்சி விளம்பரம் ஒன்று சமூகவலைதளத்தில் உலா வந்துள்ளது.  அந்த விளம்பர பக்கத்தில்  சில பயிற்சி வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் வழிமுறைகளை கூறியுள்ளார் மர்மபெண். இதை நம்பி பெண்கள் சிலர் அந்த விளம்பரதாரருடன் தொடர்புக்கொண்டுள்ளனர். விளம்பரத்தை நம்பி, அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட பெண்களிடம், இன்ஸ்டாகிராமில் பேசிய பெண், நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், அழகிய கட்டுடலாக உங்கள் உடல் மாறும், அதனால் உங்களின் ஆடையில்லாத புகைப்படங்களை அனுப்பினால், அதற்கேற்ப உடற் பயிற்சிகளை பரிந்துரை செய்வோம் என பேசியுள்ளார்.  

 பெண் உடற்பயிற்சியாளர் தானே என நம்பிய சில பெண்களும், தங்கள் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அதன் பின் தான் அவர்களுக்கு காத்திருந்தது அந்த அதிர்ச்சி. 

அவர்கள் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய அதேவேளையில், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து உங்களின் அந்தரங்க புகைப்படம் என்னிடம் உள்ளது என்றும், நான் அனுப்பும் எனது எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என சில பெண்களை ஒரு நபர் மிரட்டியுள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மிரட்டிய அந்த மர்மநபரால், அதிர்ச்சி அடைந்த பெண்கள், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, பெண் உடற்பயிற்சி வல்லுநர் போல பேசி, அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டியது பெண் இல்லை, ஆண் நபர் என்பது தெரியவந்துள்ளது. 

போலீசார் அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை ஆய்வு செய்தபோது, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது முத்தியால்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான திவாகர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார் திவாகரை கைது செய்ததுடன், அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். 

 பொதுவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் சூழலில், துளியும் விசாரிக்காமல், தங்களது தனிப்பட்ட விவரங்களை, யாரோ தெரியாத நபருக்கு பகிராமல் இருந்தால், இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து விலகி இருக்க முடியும் என போலீசார் கூறுகின்றனர.

போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் பல உள்ளது என்பதை பெண்கள் தெரிந்துகொண்டு உஷாராக இருக்கவேண்டியது மிக அவசியம். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com