மாணவர்கள் நகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்
தேனி சுப்பன்தெரு திட்டச்சாலையில் ராஜவாய்க்கால் கரையோரம் மகாராஜா தொடக்கப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகச் சென்றாயப்பெருமாள் உள்ளார்.
இங்குச் சுமதி என்ற ஆசிரியையும் பணியாற்றி வருகிறார். சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தாளாளராக அன்பழகன். இவர் அல்லிநகரத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார்.
அன்பழகன் தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாளை மாணவர்கள் முன்னிலையில் தாக்கி பள்ளிக்கு பூட்டு போட்டு சென்றார்.இந்தச் சம்பவம் சமூக வளைதலங்களில் வீடியோ வைரல் ஆனது. மாணவர்களை அருகில் இருக்கும் நகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டனர். தாளாளர் மீது தேனி டவுன் போலீஸார் வழக்கு பதிந்து அன்பழகனை தேடி வருகின்றனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், தாசில்தார் சரவணபாபு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கலாவதி ஆகியோர் மஹாராஜா தொடக்கப் பள்ளியில் இருக்கும் சத்துணவு பொருட்களையும், புத்தகங்கள் ஆவணங்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சீல் வைத்தனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், ‘இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் விசாரித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது என்றார். மேலும், மாணவர்கள் நகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர், அடுத்தக் கல்வியாண்டில் அவர்களுக்கு பக்கதிலேயே அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க வசதி செய்யப்படும் என்று கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.