காரைக்குடி: வாரச் சந்தையில் திருடப்பட்ட 45 இருசக்கர வாகனங்கள் - மீட்கப்பட்டது எப்படி?

காரைக்குடி: வாரச் சந்தையில் திருடப்பட்ட 45 இருசக்கர வாகனங்கள் - மீட்கப்பட்டது எப்படி?
காரைக்குடி: வாரச் சந்தையில் திருடப்பட்ட 45 இருசக்கர வாகனங்கள் - மீட்கப்பட்டது எப்படி?

குற்றவாளிகளை கைது செய்து 45 இரு சக்கர வாகனங்களையும் மீட்டனர்.

இருசக்கர வாகனங்களைத் திருடிய 4 கூட்டாளிகளை கைது செய்த காவல்துறையினர் 45 இருசக்கர வாகனங்களையும் மீட்டுள்ளனர். 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும். சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான புதுவயல், அரியகுடி, கண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாரச் சந்தைகள் வெவ்வேறு கிழமைகளில் நடைபெறும். இங்கு காய்கறி, இறைச்சி போன்ற உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களைக் குறிவைத்து இருசக்கர வாகனங்களை கீரமங்கலத்தைச் சேர்ந்த பிரபல திருடன் கண்ணன் தலைமையிலான ஐந்து பேர் கும்பல் திருடியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
கடந்த 22 நாட்களுக்கு முன்பு புதுவயல் சந்தையில் வங்கி ஊழியரின் மனைவி காய்கறி வாங்க வந்திருந்தபோது அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். அப்போது கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்ததில் திருடியது புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்களத்தை சேர்ந்த கண்ணன் எனத் தெரிய வந்தது. காரைக்குடி ஏ.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப் படை காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான கணேசன், விஜய் ,மாரிமுத்து, சுந்தர் ஆகியோரைக் கைது செய்த தனிப்படை காவல்துறையினர், வாரச் சந்தைகளில் திருடிய 45 இருசக்கர வாகனங்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் மீட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் ஆகும். குற்றவாளிகளை கைது செய்து 45 இரு சக்கர வாகனங்களையும் மீட்ட காவல்துறையினரை ஏ.எஸ்.பி ஸ்டாலின் பாராட்டினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com