பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு
கடலூர் அருகே விவசாயத்திற்குச் செல்லும் வீராணம் கிளை வாய்க்கால் பணியின் போது தண்ணீரில் சிமெண்ட் கலவை ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகே கந்தகுமாரன் கொள்ளுமேடு இடையே வீராணம் ஏரியின் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுக் காலமாகத் தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் திடீரென அரசு வாய்க்காலில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.
வாய்க்காலில் தண்ணீர் இருக்கவே ஒப்பந்ததாரர் மூலம் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலில் ராஜஸ்தான் இயந்திரம் மூலம் கலவை கலக்கும் பணி நடைபெற்ற வந்துள்ளது.
அப்பொழுது அங்குத் தோண்டி வைக்கப்பட்டுள்ள சுவர் கட்டும் பள்ளத்தில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் கிடப்பதால் ஊழியர்கள் இயந்திரம் மூலம் தண்ணீரில் கலவை கொட்டப்பட்டுக் கட்டை கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முழுக் காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகளே எனக் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.