விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பூத்தோட்டி வகையான பட்டாசுகளை தயாரிக்கும் பணியானது இன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டதில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர். பின்னர், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். அதற்குள் தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.