மதுரை: பேராசிரியர்கள் மீது குவிந்த பாலியல் புகார்கள்; சிக்கிய மாணவர் - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

மதுரை: பேராசிரியர்கள் மீது குவிந்த பாலியல் புகார்கள்; சிக்கிய மாணவர் - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி
மதுரை: பேராசிரியர்கள் மீது குவிந்த பாலியல் புகார்கள்; சிக்கிய மாணவர் - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

மாணவனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அருகே கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மாணவனை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவாக இருக்கும் பேராசிரியரை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம்,செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் பயிலும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி அதே கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஞானசேகரன் மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். 

இது தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஞானசேகரனிடம் கேட்டதற்கு, ’இல்லை’ என்று தெரிவித்துவிட்டார். பாலியல் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைக் களையும் நோக்கில்  அமைக்கப்பட்ட குழுவினர் இப்புகார் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞானசேகரன் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி அவருக்குக் கல்லூரி நிர்வாகம் மெமோ அளித்த நிலையில், அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதியிடம் மாணவி புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசாரிடம் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியைகள், மாணவிகள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து பாலியல் புகார் தொடர்பாக மனு அளித்தனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பேராசிரியர்கள் ஞானசேகரன், ஸ்டாலின் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த துவரிமானைச் சேர்ந்த கருப்பசாமி என்ற மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவன் கருப்பசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே கல்லூரியில் வெவ்வேறு மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்லூரி பேராசிரியர்கள் சிக்கியிருப்பது மாணவிகள் மற்றும் பெற்றோர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com