ஆம்பூர்:ஆற்று நீரில் கொத்துக் கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்கள்-காரணம் என்ன?

ஆம்பூர்:ஆற்று நீரில் கொத்துக் கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்கள்-காரணம் என்ன?
ஆம்பூர்:ஆற்று நீரில் கொத்துக் கொத்தாகச் செத்து மிதக்கும் மீன்கள்-காரணம் என்ன?

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்பூர் அருகே மாராப்பட்டுப் பகுதியில் உள்ள பாலாற்றில் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் திறந்து விடப்படுவதால் ஆறு முழுவதும் நுரை பொங்கி மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதே போல, இன்று ஆம்பூர் அடுத்தப் பெரிய கொம்மேஸ்வரம் பகுதியில் செல்லும் பாலாற்றில் திடீரென மீன்கள் கொத்துக்கொத்தாகச் செத்து மிதந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது.

ஆற்று நீரை கால்நடைகள் கூடப் பருகுவதில்லை எனவும் அவ்வப்போது தோல் தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் கழிவுநீரால் இவ்வாறு ஆற்றில் கலப்பதால் ஆற்று நீர் மாசடைவதுடன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளது.

இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளதாகவும், தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com