போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வடபொன்பரப்பி அருகே 22 வயது இளைஞரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசப்பட்ட வழக்குக் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற வட பொன்பரப்பிக் காவல்துறையினர் அந்தக் கல்குவாரி ஆய்வு செய்தனர். அப்போது, சணல் சாக்கில் கட்டப்பட்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் இருந்துள்ளது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை பிரேதத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்துத் தொடர்ந்து, விசாரணை செய்ததில் அவர் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை வயது 22 எனத் தெரியவந்தது.மேலும் தங்கதுரை ஏன் கொலை செய்யப்பட்டார். அவர் ஏன்? சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசப்பட வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஏன் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.இறந்தவருக்கும் என்ன உறவு முறை என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.