DMK Files: வில் அம்பு சின்னம்; மெகா பிரஸ் மீட் - தயாராகும் கமலாலயம்

DMK Files: வில் அம்பு சின்னம்; மெகா பிரஸ் மீட் - தயாராகும் கமலாலயம்
DMK Files: வில் அம்பு சின்னம்; மெகா பிரஸ் மீட் - தயாராகும் கமலாலயம்

‘மெகா பிரஸ் மீட்’ நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் தயாராகி வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி  கேள்வி எழுப்பி அதன் விலையை கேட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதற்கு பதிலளித்த அண்ணாமலை ‘கடிகாரத்தின் பில் மற்றும் தி.மு.க அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும்’ என்று தெரிவித்து தி.மு.க வட்டாரத்துக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். 

இந்நிலையில், ‘தி.மு.க கோப்புகள் (DMK Files) குறித்த விவரம் நாளை காலை 10.15 மணிக்கு வெளியாகும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை கமலாலயத்தில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பா.ஜ.க-வின் சில சீனியர் தலைவர்கள் கூறும்போது ‘நாளை காலை 10:15 மணிக்கு ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து11 மணிக்கு இதுதொடர்பாக கமலாலயத்தில் அண்ணாமலை பிரஸ் மீட் கொடுப்பார்’ என்றனர்.

தி.மு.க ஊழல் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அண்ணாமலை சென்னை திரும்பவில்லை. அதே நேரம் ஊழலுக்கு எதிரான போரை தொடங்கியதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அளவில் வில் அம்பு படத்துடன் பேனர் ஒன்று பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

- வெ.அபினவ்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com