தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்,
சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, நங்கவள்ளி ஜலகண்டாபுரம் பகுதி கிராமங்களில் பைக் திருடு போனது.
அதுவும் திருவிழா நடைபெறும் இடங்களில் மட்டும் பைக் திருடு போவது போலீசுக்கு விந்தையானது. நேற்று சந்தேகபடும்படியான இரண்டு பேரை பிடித்துத் தாரமங்கலம் போலீஸ் விசாரித்தனர். அதில் திருவிழா சமயங்களில் கிராமங்களில் பைக் திருடியதை ஒப்புகொண்டனர்.அவர்களிடம் விசாரித்து, திருடிய 17 பைக்குகளைப் போலீஸார் மீட்டனர்.பிடித்த போலீஸாரிடம் பேசினோம்.
'சங்ககிரியை சேர்ந்த சீனிவாசன், அல்லிமுத்து ரெண்டு பேருதான் பைக் திருட்டில ஈடுபட்டாங்க. திருவிழாவுல மக்கள் பைக்க நிறுத்திட்டு நிகழ்ச்சி பார்த்துகிட்டு இருக்கும்போது, அத தூக்கிட்டுப் போறதுதான் இவங்க ஸ்டைல். பைக் எடுத்துட்டு போய் அடிமாட்டு விலைக்கு வித்திருக்காங்க. பைக் வித்துட்டு ஜாலியா திரிஞ்சிருக்காங்க. விக்க முடியாத பைக்குகள அடமானத்துக்கு வச்சிருக்காங்க. 17 பைக் பிடிச்சிருக்கோம்.இன்னும் திருடு பைக் இருக்கான்னு விசாரிச்சிகிட்டு இருக்கோம்.' என்றனர்.
தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியனை தொடர்புகொண்டதில் நாட் ரீச்சபிள் என்பதே பதிலாகக் கிடைத்தது.