திருநெல்வேலி: ‘ஓனர் தான் வீடியோ எடுக்க சொன்னார்’ - பெண் வழக்கறிஞர்களிடம் சிக்கிய உணவக ஊழியர்

திருநெல்வேலி: ‘ஓனர் தான் வீடியோ எடுக்க சொன்னார்’ - பெண் வழக்கறிஞர்களிடம் சிக்கிய உணவக ஊழியர்
திருநெல்வேலி: ‘ஓனர் தான் வீடியோ எடுக்க சொன்னார்’ - பெண் வழக்கறிஞர்களிடம் சிக்கிய உணவக ஊழியர்

பெண் வழக்கறிஞர்களை அனுமதியின்றி வீடியோ எடுத்த உணவக ஊழியர் ‘உரிமையாளர்’ எடுக்க சொன்னதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருச்செந்தூர்- தூத்துக்குடி செல்லும் பிரதான சாலையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இதன் எதிரே பிரபல உணவு விடுதி அமைந்துள்ளது. இந்த உணவு விடுதியில் சரண்யா என்ற பெண் வழக்கறிஞர் தனது சக பெண் வழக்கறிஞர்களுடன் உணவு அருந்துவதற்காக சென்றிருக்கிறார். 
அப்போது அந்த கடையில் பணியாற்றி வரும் ஊழியர் முருகன் என்பவர் சரண்யா மற்றும் அவரோடு உணவருந்த சென்ற பெண் வழக்கறிஞர்களை அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீடியோ எடுக்க கூடாது என, தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. 
அதை கருத்தில் கொள்ளாமல் அவர் மீண்டும் வீடியோ எடுத்துள்ளார். அவர்கள் அதனை மறுபடியும் தடுத்து நிறுத்தியதால்  முருகன் ஆத்திரமடைந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர் முருகனுக்கும் பெண்  வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் கடையின் உரிமையாளர் தான் வீடியோ எடுக்க சொன்னதாக ஊழியர் முருகன் கூறியிருக்கிறார். 
தகவல் அறிந்த வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட உணவு விடுதியின் முன்பு திரண்டதால் அந்த பகுதியில்  பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது பெண் வழக்கறிஞர்கள் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனுவை அளித்தனர். 
அதைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கடையின் ஊழியர்களுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது. இறுதியில் பெண் வழக்கறிஞர்களை அனுமதி இன்றி செல்போனில் வீடியோவாக எடுத்த  ஊழியர் முருகனை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com