சென்னை : தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் - பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைப்பு
வெறும் ஆறு மணி நேரத்தில் சென்னை - கோவை செல்லமுடியும்
சென்னை - கோவை வழிதடத்தில் வந்தே பாரத் ரயிலை, சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரயில் கோவையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு, காலை 11.50 மணி அளவில் சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் வந்தடையும். மதியம் 2.25 மணியளவில் சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில், இரவு 8.15 மணியளவில் கோவை சென்றடையும். வெறும் ஆறு மணி நேர பயணமாகும்.
இந்த ரயிலில் குளிர்சாதன சேர் கார் டிக்கெட் கட்டணம் ஆயிரத்து 215 ரூபாயாகவும், குளிர்சாதன எக்ஸிக்யூட் சேர் கார் டிக்கெட் கட்டணம் இரண்டாயிரத்து 310 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணத்தில் உணவு வேண்டாம் என்பவர்களுக்காக ஆயிரத்து 57 ரூபாய் மற்றும் இரண்டாயிரத்து 116 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.