பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பிலும் தமிழக பா.ஜ.க சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதேப் போல அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதன் பின்னர் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.