சோதனை நடத்திய போது இருவரும் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் இருவேறு இடங்களில் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த ஹோமியோபதி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு, தெற்கு வாணியத்தெருவில் முகுந்தன் கிளினிக் என்ற பெயரில் ஹோமியோபதி மருத்துவம் படித்த முகுந்தன் என்பவர் மருத்துவமனை நடத்தி வந்தார். அதே பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ள செல்வராஜ் என்பவர் கார்த்திகா மெடிக்கல் என்ற பெயரில் ஆங்கில மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.
ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ள இருவரும் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்துள்ளனர். இது குறித்த தகவல் சுகாதாரத் துணை இயக்குனருக்கு சென்றுள்ளது. அவரது உத்தரவின் பேரில், அரசு மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் இவர்களது கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்திய போது இருவரும் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது. இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.