இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகலில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொறுக்குவதும், இரவில் ஸ்கூட்டரை திருடுவது வாடிக்கையாகக் கொண்ட பலே திருடர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி கடலூர் சாலையில் பி.எஸ்.பி.எம் ஹோண்டா ஷோரூம் இயங்கி வருகிறது.இந்த ஹோண்டா ஷோரூம்யில் கஸ்டமர்கள் இருசக்கர வாகனங்களைச் சர்வீஸ்காக விட்டுச் செல்வார்கள்.இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஷோரூம் பின்பக்க ஷட்டரை உடைத்து சர்வீஸ்காக விடப்பட்ட ஹோண்டா டியோ வண்டியை திருடிச் சென்றுவிட்டனர்.
ஹோண்டா ஷோரூம் ஊழியர்கள் வழக்கம் போலக் காலையில் திறந்து பார்க்கும் பொழுது கஷ்டமர் சர்வீஸுக்காக விடப்பட்ட ஹோண்டா டியோ வண்டியை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமராவை பார்க்கும் பொழுது 2 மர்ம நபர்கள் வண்டியை திருடிச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.இதையடுத்து ஷோரூம் மேனேஜர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் தனிப்படை போலீசார் அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களைத்தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகள் வைத்து விழுப்புரம் பெரிய காலனி சேர்ந்த பழனிவேல் (வயது 27).இவரது நண்பர் கீழ்பெரும்பாக்கம் ரோடு சேவியர் காலனி சேர்ந்த காக்கா (என்கிற) ஜோசப் ராஜ் வயது 27 ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.மேலும் போலீசார் விசாரணையில்,விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல். இவரது தாய், தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால், வறுமையின் காரணமாகச் சிறுவயதிலேயே குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் பொறுக்கி பழைய இரும்பு கடைகளில் விற்று அதில் வரும் பணத்தில் செலவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விழுப்புரம் அடுத்தக் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த காக்கா (என்கிற) ஜோசப் ராஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.இவருக்கும் தாய், தந்தை இல்லாததால் நண்பர்களாகப் பழகி வந்தனர்.இவர்கள் இரண்டு பேரும் நாளடைவில் ஆடம்பரமாக வாழ ஆரம்பித்தனர்.பழைய பிளாஸ்டிக் விற்ற வருமானம் குறைவாக இருப்பதால் இருவரும் சேர்ந்து பைக்கை திருட திட்டமிட்டனர்.
பகலில் குப்பைகள் உள்ள இடங்களில் தேடி பழைய பிளாஸ்டிக் பொருள்களைப் பொறுக்குவது போல நடித்து இருசக்கர வாகனங்களைத் திருடுவதற்கு நோட்டம் இடுவார்கள்.இதையெடுத்து, இரவு நேரத்தில் சென்று லேடீஸ் ஓட்டும் ஸ்கூட்டரை திருடி செல்வார்கள்.இரண்டு பலே திருடர்களுக்குப் பெரிய பைக் ஓட்ட தெரியாத காரணத்தால் லேடிஸ் ஓட்டும் ஸ்கூட்டரை மட்டும் திருடி செல்வார்கள்.
இந்த நிலையில் தான், பண்ருட்டி ஹோண்டா ஷோரூம் பின்பக்கமாகப் பழைய பிளாஸ்டிக் பொருள் குப்பைகள் இருந்துள்ளது.பழைய பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பது போல வந்து ஸ்கூட்டரை திருடுவதற்கு நோட்டமிட்டனர்.ஷோரூம் பின் பக்கமாக வழி இருந்ததால் இரவு நேரத்தில் திருடுவதற்குத் திட்டமிட்டனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இரவு ஷோரூம் பின்பக்கமாக இருந்த ஷட்டரை உடைத்து உள்ளே சென்று சர்வீஸ்க்காக விடப்பட்ட ஹோண்டா டியோ வண்டியை எடுத்துச் திருடி சென்றனர்.இவர்கள் திருடும்போது முகமூடி இல்லாமலும் பதட்டம் அடையாமலும் திருடுவார்கள்.இவர்கள் மீது 5க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.