இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள், உறவினர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் நிர்வாக பிரிவு கட்டிடம் பின்புறம் நிர்வாக கேன்டீன் அமைந்துள்ளது. இந்தக் கேண்டினில் குறைந்த விலையில் உணவு தருவதால் பலரும், இங்கு சாப்பிடுவது வழக்கம். இன்று ஜிப்மரில் பணிபுரியும் ஊழியர்கள் காலையில் அந்த கேண்டில் அமர்ந்து இட்லி, பொங்கல் ஆகியவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஊழியர் அங்கு சாப்பிடும் போது சாம்பாரில் அட்டை பூச்சி மிதந்ததால், அதிர்ச்சி அடைந்தார். ஊழியர் கேண்டின் நிர்வாகியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.