சேலம் : திடீரென செத்து மடியும் ஆடு, மாடுகள் - மர்ம மரணத்துக்கு கால்நடை மருத்துவர் சொல்லும் காரணம்

சேலம் : திடீரென செத்து மடியும் ஆடு, மாடுகள் - மர்ம மரணத்துக்கு கால்நடை மருத்துவர் சொல்லும் காரணம்
சேலம் : திடீரென செத்து மடியும் ஆடு, மாடுகள் - மர்ம மரணத்துக்கு கால்நடை மருத்துவர் சொல்லும் காரணம்

ஆடுகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவசல் வட்டார பகுதிகளில் ஆடு, மாடுகள் அடிக்கடி மயக்கம் போட்டு இறந்துவிடும் சம்பவங்கள், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு, மாடுகள் இறப்பதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்காள். அண்மையில், தலைவாசல் நாவக்குறிச்சி பகுதியில் 15 ஆடுகள் திடீரென்று மயக்கம் போட்டு இறந்தன. 'மனிதர்களுக்கு கொரோனா தொற்று வருவதுபோல ஆடு, மாடுகளுக்கு கொரோனா வந்துவிட்டதோ?' என விவசாயிகள் பேசி வருகின்றனர்.

இதுதொடர்பாக, ஐக்கிய விவசாய சங்க மாவட்ட தலைவர் சரவணன் நம்மிடம் ' வெயில் தாங்காமல் ஆடுகள், மாடுகள் இறக்கின்றன. என்னுடைய கன்றுகுட்டி ஒன்றும் இறந்து போய்விட்டது. என்ன காரணம் என்றே புரியவில்லை. மாடுகளுக்குத்தான் இப்படியென்றால், ஆடுகளும் மர்மமாக இறக்கின்றன. சில விவசாயிகளோ, சளி மாதிரி வந்துதான் ஆடுகள் இறந்து போவதால், கொரோனா  வந்திருக்கும் என பேசிக் கொள்கின்றனர். என்ன காரணம் எனப் புரியவில்லை'' என்கிறார்.

ஆடு, மாடுகள் இறப்பது தொடர்பாக தலைவாசல் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சக்திவேலிடம்  பேசினோம். ''இதுவரையில் ஆறு ஆடு, குட்டிகள் இறந்துவிட்டன. அதைப் பரிசோதனை செய்து பார்த்தோம். நுரையீரலில் சளி இருந்தது. அதைப் பார்த்து இப்படியொரு வதந்தி பரவி இருக்கலாம்.

ஆடு, மாடுகளுக்கு கொரோனா தொற்று என்பதெல்லாம் வதந்தி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆடுகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இறப்பு பிரச்சினை குறைந்துவிட்டன''  என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com