விகாஷ் எஞ்சின் சோதனை வெற்றி; விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது எப்போது?- இஸ்ரோ விளக்கம்

விகாஷ் எஞ்சின் சோதனை வெற்றி; விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது எப்போது?- இஸ்ரோ விளக்கம்
விகாஷ் எஞ்சின் சோதனை வெற்றி;  விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது எப்போது?- இஸ்ரோ விளக்கம்

நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி விடும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சாதனை புரிந்திருக்கின்றன. பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்ட பிறகு 2018ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யா திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார். 

இதனைத்தொடர்ந்து, இஸ்ரோ விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை படிப்படியாய் செயல்படுத்தி வருகிறது. இதற்காக விண்வெளித்துறை அமைச்சர ஜிதேந்திர சிங் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்.முதல்கட்டமாய் வியாமி மித்ரா என்கிற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு, இதற்கான பயிற்சிகள் பெங்களூரில் நடைபெற்று வருகின்றன. 

கடந்த 2020ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்று முடிவாகியிருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். 

இது குறித்து நெல்லை மாவட்டம் பணகுடி மகேந்திரகிரி மலையில் அமைந்திருக்கும் இஸ்ரோ மைய விஞ்ஞானி ஒருவர் நம்மிடம் கூறுகையில்,  விண்வெளிக்கு மனிதனை கொண்டு செல்லும் செயற்கை கோளுக்கான விகாஷ் எஞ்சினை இஸ்ரோ தயாரித்திருக்கிறது.கடந்த 5 ம் தேதி இந்த எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 240 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை மகத்தான வெற்றி பெறும். நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி விடும் என்றார். 

இதன் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நான்காவது வல்லரசு நாடு இந்தியா என்கிற சாதனையைப் படைக்கும் என்றார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com