ராமநாதபுரம்: மூதாட்டிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத வீட்டுவசதி வாரியம் -நீதிமன்றம் நடவடிக்கை

ராமநாதபுரம்: மூதாட்டிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத வீட்டுவசதி வாரியம் -நீதிமன்றம் நடவடிக்கை
ராமநாதபுரம்: மூதாட்டிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத வீட்டுவசதி வாரியம் -நீதிமன்றம் நடவடிக்கை

ஜப்தி செய்து எடுத்துச் சென்றதால் அலுவலகப் பணிகள் தேக்கமடைந்து வருகின்றன.

ராமநாதபுரத்தில், மூதாட்டியின் நிலத்தை கையகப்படுத்தியதற்கான தொகையை வழங்காததாதல் வீட்டு வசதி வாரிய அலுவகத்தின் கணினிகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். 
ராமநாதபுரம், பட்டணம்காத்தானை சேர்ந்தவர் 90 வயதான ராக்கம்மாள். இவருக்கு சொந்தமான டி-பிளாக் பகுதியில் உள்ள 1.37 ஏக்கர் நிலத்தை சென்ட் ரூ.1580 வீதம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு, வருவாய்த்துறையினர் கடந்த 03.04.1997-ம் தேதி நிலம் கையகப்படுத்தினர்.
இந்தத் தொகை குறைவானது எனவும், கூடுதல் தொகை வழங்க வேண்டும் என ராக்கம்மாளின் பவர் ஏஜண்டான அவரது மகள் சொர்ணவள்ளி 2018-ம் ஆண்டு ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் கடந்த 6.5.2020-ல் ரூ.36,44,467 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அத்தொகையை வழங்கவில்லை. 
இந்நிலையில் 22.2.2022-ல் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி கதிரவன், 22.02.23- அன்று வட்டியுடன் சேர்த்து ரூ. 39,08,679 வழங்க வேண்டும் எனவும், அப்படி வழங்கவில்லை என்றால் 13.4.23-க்குள் ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 
அதனடிப்படையில், இன்று ராமநாதபுரம் சாலைத்தெருவிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்தில் இருந்த இரண்டு கணினிகளை நீதிமன்ற அமீனா அஜீத்குமார் ஜப்தி செய்து எடுத்துச் சென்றார். அப்போது, சொர்ணவள்ளியின் வழக்கறிஞர் எஸ்.ஜெயச்சந்திரன், சொர்ணவள்ளி ஆகியோர் உடனிருந்தனர். 
வீட்டுவசதி வாரிய அலுவலகத்தின் ஒட்டுமொத்த பணிகளும் இந்த கணினிகள் மூலம் செய்யப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றம் கணினிகளை ஜப்தி செய்து எடுத்துச் சென்றதால் அலுவலகப் பணிகள் தேக்கமடைந்து வருகின்றன. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com