கழிவுநீர்த் தொட்டி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்

கழிவுநீர்த் தொட்டி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
கழிவுநீர்த் தொட்டி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்

308 மரணங்களில் அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 52 பேர் மரணடைந்துள்ளனர்

கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடை உள்ளிட்டவற்றைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உள்ள பகுதிகளில் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது மொத்தம் 308 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போது இதை மக்களவையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

308 மரணங்களில் அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 52 பேரும், உத்தர பிரதேசத்தில் 46 பேரும், ஹரியானாவில் 40 பேரும், மகாராஷ்டிராவில் 38 பேரும், டெல்லியில் 33 பேரும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது இறந்துள்ளனர்.

சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சிலர், 'கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யபவர்கள் பெரும்பாலும் ஏழைகளே. இது போன்ற வேலையைச் செய்யத் தொழிலாளர்களுக்கு என எந்த ஒரு சிறப்பு பயிற்சியும் மத்திய, மாநில அரசுகள் வழங்குவதில்லை. தனியார் நிறுவனங்களும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது இல்லை.

குறிப்பாக, விஷவாயு கசிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் மீட்டர்கள் கொடுப்பது இல்லை. இதைவிடக் கொடுமை உயிர்காக்கும் முதலுதவிகள் கழிவுநீர் சுத்தம் செய்பவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்களுக்குப் போதிய படிப்பறிவு இல்லை என்பதால்.

கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடை உள்ளிட்டவற்றைச் சுத்தம் செய்யும்போது முதலில் ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி உள்ளே போடுவார்கள். உள்ளே மீத்தேன் இருந்தால் சீக்கிரம் வெளியேறிவிடும். அடுத்து ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி போடுவார்கள். விஷவாயு கசிவு இருந்தால் தெரியும். அதற்குப் பின்னரே, ஆள் இறங்குவார்கள். ஆனால், சற்று தள்ளி இதே போன்ற இன்னொரு விஷவாயு இருந்தால் அந்தத் தொழிலாளியின் கதை அடுத்த ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும்.

எனவே, இது போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபடுபவர்களுக்குப் பயிற்சி, உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகளை மானிய விலையில் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதைவிட விலை உயர்ந்த கழிவுநீர் அகற்றும் நவீன எந்திரங்களை வங்கி கடன் மூலம் வழங்கலாம்' என்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com