ராமநாதபுரம்: முதியவரிடம் 50 சவரன் நகைகள் கொள்ளை - சிக்கிய 2 பெண்கள்

ராமநாதபுரம்: முதியவரிடம் 50 சவரன் நகைகள் கொள்ளை - சிக்கிய 2 பெண்கள்
ராமநாதபுரம்: முதியவரிடம் 50 சவரன் நகைகள் கொள்ளை - சிக்கிய 2 பெண்கள்

ராமநாதபுரத்தில் முதியவரை மயங்கை செய்துவிட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வேதாந்த மடம் தெருவை சேர்ந்தவர் சாந்தாராம். இவர், தனக்கு தெரிந்த நபர்களுக்கு வீட்டிலேயே நகைகளை அடமானமாக பெற்றுக் கொண்டு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் பரமக்குடி அருகே உள்ள குமரக்குடி பகுதியைச் சேர்ந்த நாக நந்தினி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாந்தாராமிடம் நகையை அடகு வைத்து அதற்கு ஈடாக ரூ.70 ஆயிரம் பணம் கடனாக பெற்றுள்ளார். 

இந்நிலையில் நாக நந்தினியிடம் கொடுத்த பணத்தை சாந்தாராம் கேட்டுள்ளார். அதற்கு ‘நான் நேரில் வந்து தருகிறேன்’ என்று கூறி பரமக்குடி கொட்டாபுளி தெருவை சேர்ந்த வசந்தி என்பவரை கூட்டிக்கொண்டு சாந்தாராம் வீட்டிற்கு நாக நந்தினி சென்றுள்ளார். இதன் பின்னர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நாக நந்தினி மற்றும் வசந்தி ஆகிய இருவரும் சேர்ந்து சாந்தாராமை மயக்கம் அடைய செய்துள்ளனர். 

பின்னர் அவருடைய வீட்டின் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளை நாகநந்தினி மற்றும் வசந்தி ஆகிய இருவரும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சாந்தாராம் வெளியூரில் உள்ள தனது மகன் மற்றும் மகளிடம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து தந்தையின் வீட்டிற்கு வந்த மகள் ரூபினி நகைகளை சரி பார்த்தபோது 50 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. 

இதுகுறித்து சாந்தாராம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் குமரக்குடியைச் சேர்ந்த நாகநந்தினி மற்றும் பரமக்குடி கொட்டாபுளி தெருவை சேர்ந்த வசந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com