சென்னை எல்.ஐ.சி. கட்டத்தில் திடீர் தீ விபத்து

சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீர் தீ விபத்து
சென்னை எல்.ஐ.சி. கட்டத்தில் திடீர் தீ விபத்து

எல்.ஐ.சி. ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையின் முதல் உயரமான கட்டடம் என்ற பெருமை எல்.ஐ. சி கட்டடத்திற்கு மட்டுமே உண்டு. இந்தக் கட்டம், கடந்த 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி திறக்கப்பட்டது. பிரபல தொழிலதிபர் எம்.சிதம்பரம் செட்டியார் வசம் இருந்த கட்டடது.

1956ம் ஆண்டு மத்தியில் உள்ள நேரு தலைமையிலான அரசு, நாடு முழுவதும் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை நாட்டுடமையாக்கியது. அப்போது, இந்த எல்.ஐ.சி. கட்டடம் அரசின் வசமானது.

இந்த நிலையில், இன்று, கட்டத்தின் மேல் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், எல்.ஐ.சியின் மேல் பரப்பில் உள்ள பெயர் பலகையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

இந்த தீ விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மிகவும் பரபரப்பான, மிகுந்த போக்குவரத்து நெருக்கடி உள்ள அண்ணாசாலையில், இந்தக் கட்டடம் உள்ள நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் அந்தப் பகுதியில், போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இந்த நிலையில் தீ விபத்திற்கு என்ன காரணம்? என தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் விளக்கம் அளித்தார். அவர், 'எல்.ஐ.சி. கட்டத்தில், மொட்டை மாடியில் உள்ள பெயர் பலகையில் தீ பற்றி எரிந்தது. அங்குள்ள பலகையில் இருந்த மின் கசிவு ஏற்பட்டதுதான் காரணம். 

தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சியால் தீ அணைக்கப்பட்டது. எல்.ஐ.சி. ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. கட்டடத்தில் உள்ள பொருட்களுக்கும் சேதம் இல்லை. தீ விபத்துக்களைத் முன்கூட்டிய தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com