நாங்குநேரி: நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து - என்ன நடந்தது?

நாங்குநேரி: நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து - என்ன நடந்தது?
நாங்குநேரி: நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து - என்ன நடந்தது?

'காட்டுப்பன்றிகளை விரட்ட நாட்டு வெடி குண்டுகளை வைத்த விவசாயிகள்' விசாரணையில் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நம்பி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (35) மாட்டுவண்டி பந்தய வீரரான இவர் தன்னுடைய வீட்டில் 2 காளைகள் வளர்த்து வருகிறார்.பல்வேறு ஊர்களில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று  கண்ணனுடைய 2 காளைகளும் காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளது.அதில் ஒரு காளை மட்டும் வீடு திரும்பியுள்ளது.மற்றொரு காளை வீடு திரும்பாததால் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.காளை கிடைக்காததால்  மீண்டும் காலையில் காட்டுப் பகுதிக்குச்  சென்று  காளையைத் தேடிய போது அங்கு முகம்  சிதைந்த நிலையில் காளை உயிருக்குப் போராடியுள்ளது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காளையை மீட்டு சிகிச்சைக்காகக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள் பகுதியிலிருந்து வெளியே வரும்  காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, நெல்,காய்கறிகள், உள்ளிட்ட பல்வேறு பயிர்களைச்  சேதப்படுத்தி வருகின்றன.காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த நாட்டு வெடிகுண்டுகளைச் சிலர் பயன்படுத்துவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. சமூக விரோதிகள் காட்டுப் பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.அந்த பகுதியில் புல் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டின் வாயில் சிக்கி வெடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாங்குநேரி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com