காரைக்குடி: செல்போன் டவர் மாயம் - நிறுவன மேலாளர் அதிர்ச்சி

காரைக்குடி: செல்போன் டவர் மாயம் - நிறுவன மேலாளர் அதிர்ச்சி
காரைக்குடி: செல்போன் டவர் மாயம் - நிறுவன மேலாளர் அதிர்ச்சி

செல்போன் டவர் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்குடியில் செயல்படாமல் இருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி,. புது சந்தைப்பேட்டை பகுதியில் செல்வலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஜிடிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் அருகருகே  இரண்டு ஏர்செல்  செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த டவர்  ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் பயன்பாடின்றி விடப்பட்டது. மேலும், கொரோனா காலம் என்பதால் செல்போன் டவர் அமைத்த ஜிடிஎல் நிறுவன ஊழியர்கள் யாரும் செல்போன் டவரை காண வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜிடிஎல் நிறுவனத்தின் மேலாளர் மதுரையைச் சேர்ந்த அஜ்மல் கான் டவரை பார்வையிட வந்த போது இரண்டு டவர்களில் ஒரு டவர் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்ய மறுத்ததால் காரைக்குடி நீதிமன்றத்தில் கடந்த  14.2.23 அன்று வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகாரை பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து, தெற்கு காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு, செல்போன் டவர் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com