‘பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது’ - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

‘பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது’ - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
‘பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது’ - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

‘பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது’ என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘தமிழ்நாடு அரசின் தேர்வு துறைக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது’ என ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. 

தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி நடைபெற இருக்கிறது. தேர்வு முடிந்ததும் மாணவ மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மற்றும் உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 

முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களின் மதிப்பெண்களில் வேறுபாடு இருப்பதை மறுகூட்டல், மறு மதிப்பீடுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டு தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்பட்டுவிடுகிறது. இதை தவிர்க்கும் விதமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.

மாணவர்கள் விடைத்தாளின் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல்விட்டு அடுத்தடுத்து வரும் தாளில் எழுதி இருந்தால் அதை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நடக்கிறது. இதன் மூலம் முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் பணியை சரியாக கவனிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

உதவித் தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர் முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் சரிபார்க்கும்போது கவனக்குறைவினால் அதிகப்பட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது தொடர்பாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகார் பெறப்பட்டு தேர்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. 

இத்தகைய நிகழ்வுகளை ஆசிரியர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். 

விடைத்தாள் மதிப்பீட்டு பணியின்போது, தேவை இல்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேப் போன்று விடைத்தாள் திருத்தும் அறைக்குள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com