தஞ்சாவூர்: நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி விபத்து- 23 பேர் படுகாயம்

தஞ்சாவூர்: நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி விபத்து- 23 பேர் படுகாயம்
தஞ்சாவூர்: நின்று கொண்டிருந்த வாகனம் மீது பஸ் மோதி விபத்து- 23 பேர் படுகாயம்

ஓட்டுநர் வேகமாக இயக்கியதே, விபத்துக்கு காரணம் என போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தகவல்

திருவையாறு அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த  ஹிட்டாச்சி வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம், வீரமாங்குடியில் இருந்து ஜீனத் என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவையாறு வழியாக தஞ்சை நோக்கி வந்தது. 

ராயம்பேட்டை என்ற இடம் அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்கப் பணியில் ஈடுப்பட்டு இருந்த ஹிட்டாச்சி வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

நேரமின்மை காரணமாக பேருந்தை, ஓட்டுநர் வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com