அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வாணியம்பாடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் 2 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு திருமணமாகி ஷர்மி என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில், பிரபாகரன் குடும்பத்துடன் சிக்கனாங்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பாம்பு தீண்டி உயிரிழந்த ஹரிஹரன் குடும்பத்தினரின் துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர், அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது, பிரபாகரனின் மூத்த மகனான 2 வயது உத்தமன் என்ற குழந்தை அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு குட்டைபோல் தேங்கியுள்ள நீரில் குழந்தை உத்தமன் எதிர்பாராவிதமாக மூழ்கியுள்ளான்.
இந்நிலையில், குழந்தை நீரில் மூழ்கியுள்ளதை கண்ட உறவினர்கள் குழந்தையை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.துக்க நிகழ்ச்சி வந்த இடத்தில் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.