கன்னியாகுமரி: ரப்பர் குடோன்களில் கைவரிசை - பிரபல கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி: ரப்பர் குடோன்களில் கைவரிசை - பிரபல கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: ரப்பர் குடோன்களில் கைவரிசை - பிரபல கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் குடோன்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள் சிக்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான வேளாண் சார்ந்த தொழிலாக ரப்பர் ஷீட் உற்பத்தி உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான தோட்டங்கள், தனியார் தோட்டங்கள் என ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. 

இதனால் குலசேகரம், அருமனை, திருவட்டார், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் குடோன்கள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள ரப்பர் குடோன்களில் இருந்து ரப்பர் ஷீட்டுகள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. 

இதேப்போல் பல்வேறு பகுதிகளில் வெண்கல பாத்திரங்களும் மர்ம நபர்களால் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் ரப்பர் ஷீட்டுகள் மற்றும் வெண்கல பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்தனர். 

போலீஸ் விசாரணையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் திற்பரப்பு ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.    

இந்நிலையில் மார்த்தாண்டம் தனியார் விடுதியில் கொள்ளையர்கள் மது அருந்திக்கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று  திற்பரப்பு ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகளான தென்தாமரைக்குளம் கார்த்திக்செல்வம், செம்மாங்காலை பகுதியை சேர்ந்த கிளைன் மற்றும் காப்புக்காடு மாராயபுரம் பகுதியை சேந்ந்த மகேந்திரகுமார் உள்ளிட்ட 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 1100 கிலோ ரப்பர் ஷீட்டுகள், 275 கிலோ வெண்கல பாத்திரங்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com