திருவள்ளூர்: அடகுக் கடைக்காரரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 180 சவரன் நகைகள் - மர்ம கும்பலைத் தேடும் போலீஸ்

திருவள்ளூர்: அடகுக் கடைக்காரரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 180 சவரன் நகைகள் - மர்ம கும்பலைத் தேடும் போலீஸ்
திருவள்ளூர்: அடகுக் கடைக்காரரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 180 சவரன் நகைகள் - மர்ம கும்பலைத் தேடும் போலீஸ்

போலீஸார் தனிப்படை அமைத்து 3 பேரை தேடி வருகின்றனர்

திருவள்ளூர்  அருகே அடகு கடைக்கு கொண்டு செல்லப்பட்ட 180 சவரன் தங்க நகையை கத்திமுனையில் கொள்ளையடித்துச்சென்ற 3 பேர் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ்லால் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக கனிஷ் நகைக்கடை நடத்தி வருகிறார். 

இந்த கடை மூலம் சென்னை மற்றும்  புறநகர் சுற்றியுள்ள சிறிய சிறிய நகை கடைக்கு நகைகளை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம்  மாதாவரம், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறிய சிறிய நகை கடைக்கு வாரத்துக்கு ஒரு முறை தனது நகைக்கடையில் இருந்து நகைகளை  கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் விற்பனை செய்தும் பணத்தை வசூலித்தும் வந்தார்.  

இந்நிலையில் இன்று தனது நகை கடையில் விற்பனையாளராக பணியாற்றும்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால், காலூராம் இருவரும் ஒன்றாக  இருசக்கர வாகனத்தில் 1500 கிராம் கொண்ட மூக்குத்தி, கம்பல், வளையல், சரடு  போன்ற முப்பதுக்கு மேற்பட்ட வகையான தங்க நகைகளை  நெற்குன்றம் கடையிலிருந்து கொண்டு விற்பனைக்காக வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து நேரடியாக மாதவரத்தில் உள்ள நகை கடைக்கு நகையை கொடுத்துவிட்டு பணத்தை வசூலித்து, பின்னர் இருசக்கர வாகனத்தில் மீதி 1.5 கிலோ மதிப்பிலான நகைகளை சோகன் லால் இருசக்கர வாகனத்தை  இயக்க காலூராம்  பின்னால் அமர்ந்தபடி நகைப்பையை வைத்துக்கொண்டு வெங்கல் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது பூச்சி அத்திப்பட்டு காரணி பேட்டை இடையே இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் பின்னால் 2 இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் ஹெல்மெட் அணிந்தவாறு  இவர்களது வாகனத்தை வழிமறைத்து உள்ளனர்.

பின்னர் நகையை வைத்திருந்த காலூராம் இடமிருந்து பிடுங்க முயற்சித்துள்ளனர். அப்போது காலூராம் கொடுக்க மறுத்ததால் வந்தவர்கள் பட்டாகத்தியை கொண்டு அவரை தாக்க முயற்சித்துள்ளனர் .

அப்போது தனது இடது கையை வைத்து தடுத்த காலுராமுக்கு கையில் கட்டை விரலில் வெட்டு காயம்பட்டது. அதைத்தொடர்ந்து சோகன் லால் அவரை வெட்ட முயற்சிக்க மேற்கொண்டபோது அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர். 

இதையடுத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக நகை கடை ஊழியர்கள் இருவரும் தனது முதலாளியான ராமேஸ்லால் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர். 

அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ராமேஸ் லால் கையில் வெட்டு காயம் பட்ட காலூராமை  அங்குள்ள மருத்துவமனைக்கு முதல் உதவி அழைத்துச் சென்றுள்ளனர்.

வெட்டு காயம் பட்ட காலூராமுக்கு இடது  விரல்கள் பகுதியில் 10 தையல்கள் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கொள்ளை சம்பவம் தொடர்பாக நகைக் கடை உரிமையாளர் ராமேஸ்லால் வெங்கல் காவல் நிலையத்தில் கொள்ளை தொடர்பாக புகார் ஆனது அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபா கல்யாண் கொள்ளை நடந்த பகுதிகள் ஆய்வு செய்தும், நகை கடை ஊழியர்களிடம் விசாரணையை மேற்கொண்டார்.

நகை கொள்ளை அடித்துச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். இதில் நகை கொள்ளையில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் விவரங்களையும் சேகரித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் திருவள்ளூர் அருகே ஹெல்மெட் அணிந்து வந்து நகை கடைக்கு கொண்டு செல்லப்பட்ட 175 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணத்தை சினிமா பாணியில்  கொள்ளை அடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com