தஞ்சாவூர்; முறையற்ற காதல் - பேராசிரியையின் மகனால் பேராசியருக்கு நடந்த கொடூரம்

தஞ்சாவூர்; முறையற்ற காதல் - பேராசிரியையின் மகனால் பேராசியருக்கு நடந்த கொடூரம்
தஞ்சாவூர்; முறையற்ற காதல் - பேராசிரியையின் மகனால் பேராசியருக்கு நடந்த கொடூரம்

பேராசிரியர் சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

சக பேராசிரியையிடம் கொண்ட முறையற்ற காதலால் பலத்த வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர். பேராசிரியரை தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை, மாதாக்கோட்டை சாலை, வங்கி ஊழியர் காலணியில் வசித்து வருபவர் 47 வயதான பாலசுப்பிரமணியன். இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி. கடந்த 14-ம் தேதி பாலசுப்பிரமணியன் தனது காரில் வழக்கம் போல் பணிக்கு சென்றார். மாலை அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மறுநாள் 15-ம் தேதி மாலை, காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வளர்மதி, அவரிடம் ’என்ன நடந்தது?’என்று கேட்டுள்ளார்.
கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது ’யாரோ கடத்திச் சென்று என்னை தாக்கியதாக’தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17-ம் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் வளர்மதி புகார் செய்தார். அதில் தனது கணவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மகன் சந்தோஷ் (25) கடத்திச் சென்று தாக்கி உள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.
புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தனது தாயுடன் கொண்ட தவறான உறவை விட்டு விடுமாறு பேராசிரியர் பாலசுப்ரமணியனிடம், சந்தோஷ் அன்பாகவும், அதட்டியும் எச்சரித்துள்ளார். ருசிக்கண்ட பூனையாய் பாலசுப்ரமணியனும் அந்த பெண் பேராசிரியையும் தங்கள் உறவை விடுவதாக இல்லை. இதனால் அவமானமும், ஆத்திரமும் அடைந்த சந்தோஷ் தனது நண்பர் கார்த்தி  என்பவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கியது தெரிய வந்தது. 
இதையடுத்து சந்தோஷ் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் மொழியில் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய மூன்று பாடங்களில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். தமிழ் இலக்கணத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இந்திய குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருது உட்பட நான்கு விருதுகள் பெற்றுள்ளார். இவ்வளவ மெத்த படித்த பேராசிரியர் சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com