நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள்.. குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள்.. குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் அதே கிராமத்தை சேர்ந்த யாமினி (10), மகேந்திரன்  (7), சந்தோஷ்  (5) ஆகிய 3 சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 

இதேப் போல் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (16) என்பவர் அருகில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். 

உயிரிழந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு தமிழக மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்