நரிக்குறவர் சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

நரிக்குறவர் சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37வது இனமாக சேர்த்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. 

இதனை தொடர்ந்து நரிக்குறவன், குருவிக்காரன் பிரிவினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியடைய ஏதுவாக தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் நேற்று முன்தினம் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. 

அதே சமயம், ‘நரிக்குறவன், குருவிக்காரன்’ என அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளதை ‘நரிக்குறவர், குருவிக்காரர்’ என திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. 

எனவே, வரும் கல்வி ஆண்டிலேயே இப்பிரிவுகளை சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசு வெளியிட்டவாறே தமிழக அரசும் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

வருகின்ற நாட்களில் தமிழக அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும் போது, தமிழக அரசும் அதை திருத்தி வெளியிடும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்