தஞ்சாவூர் வந்த மலேசிய துணை முதல்வர் - ஓர் ஆச்சர்ய பின்னணி

தஞ்சாவூர் வந்த மலேசிய துணை முதல்வர் - ஓர் ஆச்சர்ய பின்னணி

தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை காண மலேசியாவின் சர்வாக் மாநில  துணை முதல்வர் தஞ்சாவூர் வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் உள்ள சர்வாக் மாநில துணை முதல்வராக ஆவங் டெங்கா உள்ளார். இந்த நிலையில், தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பள்ளி ஆசிரியரை காண தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் வசித்து வரும் 85 வயதான அப்துல் லத்தீப் மலேசியாவின் சர்வாக் மாநிலத்தில்  லாவாஸ் மாவட்டத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.  

பணி ஓய்வுக்கு பிறகு, சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், தனது ஆசிரியரை காண விருப்பப்பட்ட மலேசிய சர்வாக் மாநில  துணை முதல்வர் ஆவான் டெங்கா, தனது குடும்பத்தினருடன் இன்று தஞ்சாவூர் வந்தார். 

அங்கு தனது ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவான் டெங்கா, நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரியரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரியரை வந்து பார்ப்பேன் என  தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்