'கோவலன்-கண்ணகி பாதையில் மதுரை நோக்கி பயணம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

'கோவலன்-கண்ணகி பாதையில் மதுரை நோக்கி பயணம்' -  அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவலன் - கண்ணகி பாதையில் அடுத்த வாரம் மதுரை நோக்கி பயணிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நடைபெறும் காவிரி இலக்கியத் திருவிழாவினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் சிறப்புரையாற்றிய அவர்,  காவிரி படுகை என்பது வேளாண் துறையை மட்டும் வளர்த்த படுகையாக மட்டுமல்லாமல் எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும், வளர்த்தெடுத்த ஒரு பகுதியாக உள்ளது. 

கோவலனும், கண்ணகியும், இதே காவிரி படுகையில் இருந்து தான் மதுரை சென்றார் என்று சொல்லும்போது, துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய நான் இலக்கியத்திற்கான விழாவினை நடத்துகிறேன். தஞ்சையில் தொடங்கி மதுரைக்கு அடுத்த வாரம் நானும், அதே பாதையில் தான் செல்ல இருக்கிறேன்.

பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சிக்கு நாம் வரவில்லை, நேரம் போகவில்லையே என்று எழுதுகின்ற எழுத்தாளர்கள் மத்தியில் நம் மக்களின் வாழ்வாதாரத்தை எண்ணி, எண்ணி நேரம் போதவில்லையே என்று எழுதக் கூடியவர்களாகவும் தான் நம்முடைய எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் உள்ளனர். அவர்கள் ஒரு இனத்தின் பாதுகாப்பு கேடயமாக இருக்கிறார் என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கீழடி அருங்காட்சியகத்தை மாணவர்கள் பார்வையிட வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மொழியின் செழுமையினையும், நமது மரபு பண்பாடு கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும், இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இரண்டு நாட்கள்(18,19ம் தேதி) நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பெருமைமிகு சிறப்புமிகு நதிகளில் என்றும் இளமையும், வளமையும் கொண்ட பொன்னி என சிறப்பு பெற்ற காவிரி நதியினை போற்றிடும் வகையில் காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டினை நினைவு கூறும் வகையில், அது சார்ந்த இலக்கியம் வாசிப்பு என அறிவார்ந்த பரப்பில் பல ஆளுமைகள் கொண்டு காவிரி இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் சங்கீத மஹால் என இரண்டு அரங்குகளில் விழாவில்  இலக்கியங்கள் படைப்பு மற்றும் பண்பாட்டினை மையப்படுத்தி படைப்ப அரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞர் சல்மா கூறும்போது, இதுபோன்ற இலக்கிய திருவிழாக்களில் பிற மாநில எழுத்தாளர்களையும் அழைத்து உரையாற்ற  வேண்டும். அப்போதுதான் அவர்கள் மாநில இலக்கியங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்