'ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி இல்லை' - திருவாரூரில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

'ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி இல்லை' - திருவாரூரில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று திருவாரூரில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

பின்னர் பேசிய அவர், இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து பாரம்பரிய அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள், உயிர் சத்துக்கள் மற்றும் உயிர் மூலக்கூறு சேர்மங்கள் தொடர்பான அறிவியல் பூர்வ ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் சேகரிக்கப்பட்டு, அதன் மருத்துவ குணங்கள் குறித்தும், ஆய்வு மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து 25க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகளோடு இணைந்து தமிழக அரசு இயற்கையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் என உறுதி அளித்தார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வரும் தலைமுறைக்கு நமது பாரம்பரிய நெல்லை எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடன் இணைந்து தமிழக அரசு இயற்கையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும். மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு உறுதியாக அனுமதி வழங்கப்படாது என்று  திட்டவட்டமாக தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்