யானைகளின் தொடர் மரணங்கள்: தருமபுரியில் அடுத்த சோகம்

யானைகளின் தொடர் மரணங்கள்: தருமபுரியில் அடுத்த சோகம்

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர்  அருகே கெலவள்ளி என்ற இடத்தில் உணவுதேடி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை மின்கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு யானைகள் சுற்றித்திரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதனையடுத்து, அந்த யானையை, சின்னத்தம்பி என்ற கும்கி யானை உதவியுடன் முதுமலை காப்பகத்திற்கு வனத்துறையினர் பிடித்துச்சென்றனர்.

இந்த நிலையில் பாப்பாரப்பட்டியில் சுற்றிவந்த ஒரு காட்டு ஆண் யானை நேற்று மாலை 4 மணி அளவில் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து வெளியேறி தர்மபுரி வழியாக கம்பைநல்லூர் பகுதியில் உணவுதேடி இன்று காலை நுழைந்துள்ளது. சுமார் 17 மணி நேரம் எந்தவித சேதமும் செய்யாமல் யானை பயணித்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை அந்த யானைக் கண்டபொதுமக்கள், அதனை துரத்தியுள்ளனர். பொது மக்களிடம் இருந்து தப்பிக்க அந்த யானை வேகமாக சென்றபோது, மின்கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

யானையைத் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபடும்போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டித்துவிட்டு இந்த பணியை மேற்கொண்டு இருந்தால், விலைமதிக்க முடியாத யானையின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும், யானையை விரட்டும் பணியில் பொதுமக்கள் அதிகமாக கூச்சலிட்டு பதட்டத்தை ஏற்படுத்தியதால்தான்  யானைக்கு இந்த பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்