சிறுமிகளின் ஆபாசப் படம்; தஞ்சை இளைஞரின் தொடர்பு- சி.பி.ஐ விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சிறுமிகளின் ஆபாசப் படம்; தஞ்சை இளைஞரின் தொடர்பு- சி.பி.ஐ விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
சிறுமிகளின் ஆபாசப் படம்; தஞ்சை இளைஞரின் தொடர்பு- சி.பி.ஐ விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இண்டர்போல் புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் 21 இடங்களில் இந்த விசாரணையும், கைதும் நடைபெற்றுள்ளது.

சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த இளைஞரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விகடர் ஜேம்ஸ் ராஜா (32).  இவர் பிரதமரை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்து பிரதமர் அலுவலகங்களுக்கு மெயில் அனுப்பியதாக கூறி நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் டெல்லியில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்தனர். ஆனால் விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
இந்தியாவில் சிறுமிகளை வைத்து ஆபாசமாக படம் எடுத்து அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இண்டர்போல் போலீஸ் இந்திய சிபிஐ துறைக்கு புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் தான் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் கைது  செய்துள்ளனர் என்பது பின்னர் தெரிய வந்தது. சுமார் மூன்று நாட்களாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ஆராய்ச்சி மாணவரான விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறுமிகளுடன் உல்லாசமாக இருப்பது போல் படம் பிடித்து அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், விக்டர் ஜேம்ஸ் ராஜா வீடியோவிற்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தான் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது 67B IT Act, pocso Act 2012 - sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b of IPC act ஆகிய பிரிவுகளில் கீழ்  சிபிஐ அதிகாரி டிஎஸ்பி சஞ்சய் குமார், கௌதம் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இண்டர்போல் புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் 21 இடங்களில் இந்த விசாரணையும், கைதும் நடைபெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com