பிரதமர் அலுவலகத்துக்கே அவதூறு இமெயில் - சி.பி.ஐ வளையத்தில் தஞ்சை இளைஞர்

பிரதமர் அலுவலகத்துக்கே அவதூறு இமெயில் - சி.பி.ஐ வளையத்தில் தஞ்சை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கே அவதூறு இமெயில் - சி.பி.ஐ வளையத்தில் தஞ்சை இளைஞர்

போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக இ-மெயிலுக்கு பிரதமர் குறித்து அவதூறாக கருத்துக்கள் பதிவிட்டதாக தஞ்சையை சேர்ந்த பிஎச்டி மாணவர் சிபிஐ அதிகாரிகளால் தனி இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இணையத்தில் தொழில் முறையாக பதிவேற்றம் செய்தோடு சீரியல் குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது இணையவழி தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், சாலியமங்களம் பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா என்ற எம்.காம் பட்டதாரியான இவர் சுற்றுசூழல் குறித்து பி.எச்.டி படித்து வருகிறார். சஞ்சய் கெளதம் தலைமையிலான 11 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக15ம் தேதி காலை 6 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி விசாரணை நடத்த தொடங்கினர். வீட்டில் இருந்த அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரை வீட்டில் இருந்து வெளியேற்றி கதவை தாழிட்டு தனிமையில்  விசாரித்துள்ளனர். பின்னர் அவர்கள் 15ம் தேதி காலை 7.30 மணிக்கு புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய அரசின் ஐஐசிபிடி விருந்தினர் மாளிகையில் வைத்து சிறப்பு விசாரணை செய்தனர். 
அந்த ஊரில் அதிகம் படித்தவர் என கூறப்படும் விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. சிறுமிகளை இணையதளங்களில் பதிவேற்றும் செய்வது, பதிவிறக்கம் செய்வதும் அந்த இணையதளங்களில் பார்ப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது 67B IT Act, pocso Act 2012 - sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b of IPC act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கிராமத்தில் இயற்கை விவசாயம் மீது ஆர்வம், சமுக நலனில் அக்கறை என தன்னை ஒரு ஆர்வலராக காட்டி வந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிலே ராமன் வெளியில் கிருஷ்ணனாக வலம் வந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com