மேஜர் ஜெயந்தின் உடல் இன்று (மார்ச் 17) பெரியகுளம் கொண்டு வரப்படுகிறது.
அருணாசல பிரதேசத்தின் மண்டாலா பகுதியில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 பைலட்டுகளும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த இரு பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். மேஜர் ஜெயந்த் உடல், சொந்த ஊரான தேனி ஜெயமங்கலம் பகுதிக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்கள் மண்டலாவின் கிழக்கு பங்களாஜாப் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் இன்று (மார்ச் 17) பெரியகுளம் கொண்டு வரப்படுகிறது.