கொல்லிமலை சித்தருக்கு மிளகாய்த் தூள் அபிஷேகம் - என்ன வேண்டுதல்?

கொல்லிமலை சித்தருக்கு மிளகாய்த் தூள் அபிஷேகம் - என்ன வேண்டுதல்?
கொல்லிமலை சித்தருக்கு மிளகாய்த்  தூள் அபிஷேகம் - என்ன வேண்டுதல்?

வரும் 19 ஆம் தேதி வரை வரை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கல்லுட்டை கிராமத்தில் மழை வேண்டி கொல்லிமலை சித்தருக்கு மிளகாய தூள் அபிஷேகம் நேற்று நடைபெற்றது.  

கல்லுட்டை கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, நல்ல மழை பெய்து கோடையில் தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் என்று மிளகாய் தூள் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டும் கோடை காலம் தொடங்கும் முன்பே கோயிலில் இதற்கான சிறப்பு பூஜைகள் செய்ய பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

இதையடுத்து, கொல்லிமலை சித்தர் முத்து மணிகண்டன் முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அதோடு சித்தருக்கு மழை வேண்டி மிளகாய் தூள் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் யோகம் கூடி வர வேண்டியும் மடியேந்தி சித்தரிடம் வேண்டி கொண்டனர். அவர்களுக்கு குங்குமம், விபூதி, எலுமிச்சையை பிரசாதமாக கொடுத்து அருள் வாக்கு சொன்னார்.

மழை வேண்டி மிளகாய் தூள் அபிஷேகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில், அப்பகுதியில் மழை பெய்தது. இதைக் கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

நீலகரி, கோவை, தேனி, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு வட உள்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 19 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com