ஆம்பூர்: ‘எங்க வார்டுக்கு ஒன்னும் செய்யல’- வடிவேலு பட பேனருடன் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்

ஆம்பூர்: ‘எங்க வார்டுக்கு ஒன்னும் செய்யல’- வடிவேலு பட பேனருடன் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்
ஆம்பூர்: ‘எங்க வார்டுக்கு ஒன்னும் செய்யல’- வடிவேலு பட பேனருடன் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்

வடிவேல் மீம்ஸ் புகைப்படத்துடன் கூடிய பேனரை கையில் ஏந்தி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

ஆம்பூர் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் 27வது வார்டு சுயேச்சை உறுப்பினர் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையிலும், தனது வார்டில் எந்த ஒரு நிதியும் வழங்கவில்லையென கூறி,  வடிவேலு மீம்ஸ் புகைப்படம் கூடிய பேனருடன் வந்ததால் திமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில், வார்டு உறுப்பினர்களுக்கான  மாதந்திர சாதாரண கூட்டம் ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது மற்றும் நகராட்சி ஆணையர் ஷகிலா தலைமையில் இன்று ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில்  நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் 36 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்ற நிலையில்,கூட்டத்தில் ஆம்பூர்  நகராட்சிக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து விவாதம் நடைப்பெற்றது.

அப்பொழுது ஆம்பூர் நகராட்சி  27வது வார்டு உறுப்பினர் ஹர்ஷா. இவர் பாஜக பிரமுகர் ஆவார். இவருக்கு பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இன்று நகர் மன்ற கூட்டத்திற்கு வந்த அவர், தனது 27வது  வார்டில்  இதுவரையில் எந்த ஒரு பணியும் செய்யப்படுவதில்லை என  கூறி, வடிவேல் மீம்ஸ் புகைப்படத்துடன் கூடிய பேனரை கையில் ஏந்தி நகராட்சி அலுவலகத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த திமுக வார்டு கவுன்சிலருக்கும்,  சுயேட்சை வார்டு உறுப்பினர் ஹர்ஷா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com