அங்குள்ள ஊழியர்களிடமும், சார் பதிவாளரிடமும் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு ஆகிய இரண்டு இடங்களிலும் இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, கணக்கில் வராத பணமாக திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.8.5 லட்சமும், செய்யாறில் ரூ.2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேறு எங்காவது பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாரிடம் பெறப்பட்டது என்பது குறித்து போலீசார் அங்குள்ள ஊழியர்களிடமும், சார் பதிவாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு திருவண்ணாமலையிலும், 6 பேர் கொண்ட குழு செய்யாறிலும் சோதனை செய்து வருகின்றனர்.