அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அவர், தன் பணிக்காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள், சந்தித்த மனிதர்கள், போலீஸாரின் அன்றாட பணிகள், அவர்களுக்குள் இருக்கும் மனிதநேயம் ஆகிய தகவல்களைத் தொகுத்து 'காக்கி' என்ற புத்தகத்தைக் கடந்த 2021ம் ஆண்டு எழுதியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் 'காக்கி' (STEPPING BEYOND 'KHAKI') என்ற புத்தகத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தனது பனிக்காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து அழகாக எழுதியுள்ளார்' எனப் பதிவிட்டுள்ளார். மேலும், 'இந்த புத்தகம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.