'மதுவால் சீரழிந்துவிட்டேன்' - பாட்டில் குண்டு வீசிய வாலிபர்: டாஸ்மாக் ஊழியருக்கு நேர்ந்த சோகம்

'மதுவால் சீரழிந்துவிட்டேன்' - பாட்டில் குண்டு வீசிய வாலிபர்: டாஸ்மாக் ஊழியருக்கு நேர்ந்த சோகம்
'மதுவால் சீரழிந்துவிட்டேன்' - பாட்டில் குண்டு வீசிய வாலிபர்: டாஸ்மாக் ஊழியருக்கு நேர்ந்த சோகம்

மதுவாலே தன்னுடைய சீரழிந்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டை கடைக்குள் வீசியிருக்கிறார்.

மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டு வீச்சில் காயமடைந்த அரசு மதுபான கடை விற்பனையாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 
காரைக்குடி அருகே பள்ளத்தூர் மதுபான கடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மண்ணென்ணெய் பாட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காயம் அடைந்த மதுபான கடை ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக அர்ஜுனன் (46) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ம் தேதி இரவு கடையின் கதவை பாதியளவு அடைத்துவிட்டு மது விற்பனை சம்பந்தமான கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடை முன் வந்த பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் மதுவாலே தன்னுடைய சீரழிந்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடைக்குள் வீசியிருக்கிறார்.
இதில் மூன்று அட்டைப்பெட்டியில் மது பாட்டில்கள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. அத்துடன் ரூ.76,880 பணமும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த அர்ஜூனன் மீதும் தீ பற்றியது. உடலில் 60% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுனன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் அரசு மதுபான கடை ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com