எட்டு வழிச்சாலை திட்டம் உறுதியாக செயல்படுத்தப்பட உள்ளது
மாநிலங்களவையில், பா.ம.க. உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அதில், சென்னை - சேலம் எட்டுவழிச்சாலைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்தார். இதனால், எட்டு வழிச்சாலை திட்டம் உறுதியாக செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் 6 மாவட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியின் போது செயல்படுத்த முயன்ற போது கடும் எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனாலும், இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து, 6,978 ஏக்கர் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல்வேறு தரபினரும், வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இந்த திட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், மத்திய அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை அடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்த திட்டத்தை தி.மு.க. எதிர்க்கவில்லை என்றும், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றுதான் தி.மு.க. கூறியது. இந்த விவகாரத்தில் முதல்வர் கொள்கை முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
இதனால், சென்னை - சேலம் எட்டுவவிச்சாலை திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்கக்கது.