அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள்: சிக்கலில் கன்னியாகுமரி பாதிரியார்?

அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள்: சிக்கலில் கன்னியாகுமரி பாதிரியார்?
அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள்: சிக்கலில் கன்னியாகுமரி பாதிரியார்?

ஆதாரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளோம்

"கன்னியாகுமரி மாவட்டம், பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனடிக்ட் ஆன்டோ, அந்த பகுதியில் உள்ள பல பெண்களோடு கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்பித்துள்ளோம்" என மினி அஜிதா என்ற பெண் புகார்  தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இவருக்கும் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆஸ்டின் ஜியோ என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், பாதிரியார் பெனடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஆஸ்டின் ஜினோ மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா, நாகர்கோவிலில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். 

பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் "பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனடிக்ட் ஆன்டோ அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார். அதை தட்டிக்கேட்டதால் எழுந்த பிரச்சினையில் எனது மகன் ஆஸ்டின் ஜினோ மீது பாதிரியார் பொய் புகார் அளித்துள்ளார்.

மேலும், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பல பெண்களோடு கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக உரிய ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை காவல்துறை அதிகாரியிடம்   சமர்ப்பித்துள்ளோம். எனவே, பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com